Posts

Showing posts from July, 2022

பிழையோ நான்

 பிழையோ நான்  என் பகலின் வேட்கை  இரவின் தானமாகி போக  என் காதல் நிறைமாதமாய்  தெருவினில் நிற்க்க  கை கூட நினைத்து  கைவிட்டதென்னமாயமோ தோன்ற ! மெய் என்றறெண்ணி யாக்கையில் இணைந்ததோ அந்த மெய்ஞானம் மயங்கி  தூசு போல் ஆகினேன். காற்றும் கண்கலங்கி செல்ல                                            என்காதலே!  நீ தந்த பாடத்தின் பிழையோ                                                               நான்.                                                            ...

வேசியின் மனம்

Image
வேசியின் மனம்            சிலர்  தென்றலாய் என்  உடலை தழுவிவிட்டு செல்வார்கள் .சிலர் புயலாய் அடித்து செல்வார்கள் .சிலர் மென்மையாய் தொட்டுக் கொள்வார்கள் .           "நான் கல்லறை பூவாய் வாசம் வீச என் வாசம் கண்டு மயங்கும் பல பேர் எவரும் கருவறைக்கு கொண்டு செல்லமாட்டார்கள்" .           கடலின் அலையாய் என் உணர்வுகள் அலைக்கழித்தாலும் "கடலலை கரையோடு" தழுவிசெல்லும் என் உணர்வுகளை நான் என்னென்று சொல்வது"           கலங்கரை விளக்கம் கூட என் கனவில் இல்லை "ஏனென்றால் என்னை  தீண்டும் ஒவ்வொரு ஆணின் கரமும் இதுவல்லவே  என் கலங்கரை விளக்கம் என நினைத்தேன்.            என்னை சீண்டும் ஒவ்வொரு ஆண்களின் குரல்கள்  என் மேல் பயணம் செய்யத்தான் என அறிந்தேன்.            கடற்கரையோரத்தில் நடந்து செல்லும் கூட்டம் போல்  என்மீதும்  விளையாயாடி செல்வார்கள் . தூர நின்று காதலர்கள் கதைப்பது போல் கதைத்து செல...